கந்தையா அருந்தவராஜா. யாழ்ப்பாணம்: அஞ்சு வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், கல்வியங்காடு, நல்லூர்).
(6), 276 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-53561-1-4.
இந்நூல் காந்தியின் முழுமையான இந்திய விடுதலைப் போராட்ட இணைவுக்கு முன்னதான இந்திய வரலாற்றினைக் குறிக்கின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐரோப்பியர்கள், கர்நாடகப் போர்கள், வங்காளத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்க எழுச்சி, வரன்ஹேஸ்ரிங்ஸ் (1772-1785), பிற் இந்தியச் சட்டம், கரன்வாலிஸ் பிரபு (1786-1793), மைசூர் போர்கள், ஜோன் ஷோர் (1793-1798), வெல்லஸ்லி பிரபு (1798-1805), மராட்டியப் போர்கள், மின்ரோ பிரபு (1807-1813), ஹேஸ்ரிங்ஸ் பிரபு (1813-1823), அமெர்ஸ்ட் பிரபு (1823-1828), வில்லியம் பென்ரிங் பிரபு (1828-1835), இராஜா இரஞ்சித் சிங், சீக்கியப் போர்கள், பர்மியப் போர்கள், ஓக்லன்ட் பிரபு (1836-1842) எல்லன்பரோ பிரபு (1842-1844), ஹார்டிஞ்ச் பிரபு (1844-1848), டல்ஹெளசி (1848-1856), 1857இன் கிளர்ச்சி, சமுதாயச் சமய சீர்திருத்த இயக்கங்கள், 1773 பாராளுமன்ற ஒழுங்குமுறைச் சட்டம், பட்டயச் சட்டம் 1793, பட்டயச் சட்டம் 1813, பட்டயச் சட்டம் 1833, பட்டயச் சட்டம் 1853, 1858ஆம் ஆண்டின் சட்டம், மகாராணியின் அறிவிப்புப் பிரகடனம் 1858, கனிங் பிரபு (1856-1862), லோரன்ஸ் பிரபு (1864-1869), மேயோ பிரபு (1869-1872), நோர்த்புஷ்க் பிரபு (1782-1876), லிட்டன் பிரபு (1876-1880), ரிப்பன் பிரபு (1880-1884), டவ்ரின் பிரபு (1884-1888), லோரன்ஸ் டௌன் பிரபு (1888-1894), இரண்டாம் எல்ஜின் பிரபு (1894-1899), கேர்சன் பிரபு (1889-1905), இந்தியக் கவுன்சில் சட்டம் 1861, இந்தியக் கவுன்சில் சட்டம் 1892, இந்தியத் தேசிய இயக்கம், இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றம், இரண்டாம் மின்ரோ (1905-1910), இரண்டாம் ஹர்டிஞ்ச் (1910-1916), மின்ரோ-மோர்லி சீர்திருத்தங்கள் (1909), மொண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் ஆகிய 48 அத்தியாயங்களில் இந்நூல் நவீன இந்திய வரலாற்றை விளக்குகின்றது.