17004 எளிய தமிழில் Python & Google Colab

எப்.எச்.ஏ.ஷிப்லி, எச்.எம்.எம்.நளீர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

ix, 95 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-09-3.

விரிந்து நிற்கும் தகவல் தொழில்நுட்ப அறிவுப் பரப்பினுள்  Python, Google Colab    ஆகிய தொழில்நுட்பங்கள் சார்ந்த கணினி நிரலாக்கல் அம்சங்கள் குறிப்பிடத்தக்கன.  விசேடமாக  Python கணினி நிரலாக்கமானது தற்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிரலாக்கமாக அறியப்பட்டுள்ளது. சிறிய மற்றும் பெரிய அளவிலான கணினிசார் திட்டங்களை செயற்படுத்தும் இலகுவானதும், வினைத்திறன் மிக்கதுமான ஒன்றாக Python கணினி நிரலாக்கம் காணப்படுகின்றது. இந்நிரலாக்கத்தினை தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எப்.எச்.ஏ.ஷிப்லி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முதுநிலை விரிவுரையாளராவார். கலாநிதி எச்.எம்.எம்.நளீர், அப்பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 195ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்