17033 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 25ஆவது ஆண்டு அறிக்கை (1966-1967).

 கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு-6:  இராசா அச்சகம், பாமன்கடை).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. 1966-1967 ஆண்டுக் காலகட்டத்தில் வெள்ளிவிழாக் காணும் இச்சங்கத்தின் 25ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 1.7.66 முதல் 23.11.67 வரையான காலத்திற்குரியது. இதுவரை காலமும் சங்கத்தில் 156 சாதாரண உறுப்பினர்களும் 65 சீவியகால உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். அறிக்கையிடப்படும் ஆண்டில் 21 சாதாரண உறுப்பினர்களும் ஒரு சீவியகால உறுப்பினரும் இணைந்துகொண்டுள்ளனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ச.சரவணமுத்து சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5083).

ஏனைய பதிவுகள்

Best No deposit Incentives 2024

Articles Casino Madslots free chip: To locate Qualified Online game The way we Price Casinos Which have 100 percent free Spins Incentives Totally free Spins