சமன் இந்திக்க ஜயசிங்க (மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: மத்திய கலாசார நிதியம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்ரமுல்ல, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கலாசார நிதிய அச்சகம், இல. 11, சுதந்திர அவென்யு).
viii, 38 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 95.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-613-376-9.
அறிமுகம், நூதனசாலையின் அமைவிடம், கதிர்காமம் மாநகரம், கதிர்காமம் நூதனசாலையிலுள்ள அரும்பொருட்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கதிர்காமம் நூதனசாலையிலுள்ள அரும்பொருட்கள் என்ற பிரதான பிரிவில் செவனகல சமாதிநிலை புத்தர் சிலை, தெலுல்லகவந்த நின்றநிலை புத்தர் சிலை, ஹெனகெசூவௌ நின்றநிலை புத்தர் சிலை, சமாதிநிலை புத்தர் சிலையின் இடுப்பின் கீழ்ப்பகுதி, சமாதி நிலை புத்தர் சிலையின் உடற்பகுதி, நின்ற நிலை புத்தர் சிலையின் உடற்பகுதி, நின்ற நிலை புத்தர் சிலையின் உடற்பகுதி, மாளிகாவில அவலோகிதேஸ்வர போதிசத்துவர் படிமம், போதிசத்துவர் படிமம், மைத்திரி போதிசத்துவர் படிமத்தின் சிரசு, போதிசத்துவர் சிலையின் சிரசு, அவலோகிதேஸ்வர போதிசத்துவர் சிலையின் உடற்பகுதி, கிரிந்த கற்றூண் சாசனம், கதிர்காமம் கற்றூண் சாசனம், திஸ்ஸமகாராம கற்பலகைச் சாசனம், யூபஸ்தம்பம், ஜத்திரபீடம், பாதச்சுவட்டுக் கல், மட்பாண்டங்கள், மெகாலித்திக் கற்காலத்து மட்பாண்டத் தாழி, மகுடம், முத்துக்கள், நாணயங்கள், கதிர்காம தேவாலயத்தின் பழைமையான பல்லக்கு, கதிர்காம தேவாலயத்தின் பழைமையான கதவு, வட்ட வடிவ நெற்குத்தும் கல், தேவ நாற்காலி, தேவாபரணங்கள், கழுவுநீர்ப் பாத்திரம், றுஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேக்கள், வெஹெரகல போதி விருட்ச மாடம், வெஹெரகல நினைவுச் சின்னம் ஆகியவற்றின் விவரணங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71590).