17094 சிக்மன்ட் புரொய்டின் உள-பாலியல் வளர்ச்சிக் கொள்கை மற்றும் சிக்மன்ட் புரொய்டின் ஆளுமை இயங்கியல் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-1).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

32 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20ஒ13 சமீ., ஐளுடீே: 978-955-0958-66-5.

சிக்மன்ட் புரொய்டின் (Sigmund Freud) உள-பாலியல் வளர்ச்சிக் கொள்கை (Psycho-sexual Devemlopment Theory) பற்றிப் பேசும் முதல் கட்டுரையானது அறிமுகம், வாயின்பப் பருவம், ஆசனவாய் இன்பப் பருவம், பாலுறுப்பு இன்பப் பருவம், உள்ளுறை பருவம், முடிவுரை ஆகிய பிரிவுகளின்கீழ் விளக்கப்பட்டுள்ளது. சிக்மன்ட் புரொய்டின் ஆளுமை இயங்கியல் கொள்கை (Psycho Dynamic Theory) என்ற இரண்டாவது கட்டுரை, உள இயங்கியல் கொள்கை, இயல்பூக்க மனம், யதார்த்த மனம், உயர்நிலை மனம், மூன்று மன அம்சங்கள் பற்றிய ஒரு நோக்கு, மனத்தின் விழிப்புணர்வு நிலைகள், அறிநிலை மனம், உப அறிநிலை மனம், அறியாநிலை மனம், உளக்காப்பு நடத்தைகள், மனதுள் புதைத்தல், முன்பருவ நகர்வு, பிறர்மீது சாற்றல், தன்னுள் கொள்ளல், உணர்ச்சிப் பெயர்ச்சி, எட்டாப்பழம் புளிக்கும், நியாயப்படுத்தல், எதிர்மிகை நடத்தை, நல்துறை செலுத்தல், கொள்கை மதிப்பீடு ஆகிய குறுந்தலைப்புகளின்கீழ் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 341ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்