அம்பலவாணர் இராஜரட்ணம். கொழும்பு: அம்பலவாணர் இராஜரட்ணம், 1வது பதிப்பு, ஆடி 2023. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை).
x, 184 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94838-1-1.
நல்லூர் முருகன் கோயில் வரலாறும் சிறப்பும், தமிழ்மொழியைப் பாதுகாப்போம், கலாசாரம் பேணுவோம், பேராசை, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ், இந்து மதத்தைக் காப்போம், மனிதனே முழு மனிதனாக வாழ்வாயாக, கலியுகமும் அழியுகமும், நந்திக் கொடியேற்றப் பாடல், அன்றும் இன்றும், களவு செய்வதை அறவே ஒழியுங்கள், சூதையும் வஞ்சனையையும் விலத்தி வாழ்வோம், கள்(மது) உண்ணாமையைக் கடைப்பிடிப்போம், ஆசைக்கும் உண்டோ அடைக்கும் தாழ், கொலை செய்யாதீர்கள் பாவத்தைத் தேடாதீர்கள், சிற்றின்பம் ஒழித்து பேரின்பம் பெறுவோம், தமிழ்மொழிக்கு வரப்போகும் பேராபத்து, சீரழிந்த கலாசாரத்தை சீர்செய்ய முன்வாரீர், நீரின் மகத்துவத்தை அறிந்து அதனை சிக்கனமாகப் பாவிப்போம், தர்மம் தலைகாக்கும், வாழை மரத்தின் மகத்துவத்தை பேணுவோம், அமரர் சண்முகதாஸ் மாப்பாண முதலியார், பசு வதை செய்யாதீர்கள், இனிய தமிழ்மொழி, பெற்றோர்களுக்கு சில நல்லுரைகள், உயிருக்குறுகண் செய்யாதே, எம் மதத்தைக் காப்போம், பிள்ளைகளுக்கான நல்லுரைகள், கலப்படம் செய்யாதே, நந்தியெம் பெருமானின் பெருமைகளும் அவரை வணங்குவதால் அடையும் நன்மைகளும், விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டதே மெய்ஞ்ஞானம், மனிதனும் தெய்வமாகலாம், சரணடைந்தோம் விநாயகா (பஜனைப் பாமாலை), நல்லூர்க் கந்தன் (பஜனைப் பாமாலை) ஆகிய 34 ஆக்கங்களை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. சைவத்தையும் தமிழையும் போற்றிவாழும் நற்பிரஜைகளாக உருவாகுவோம், உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளை அடிநாதமாகக் கொண்ட கட்டுரைகள் இவை. யாழ்ப்பாணம், நல்லூர் முத்திரைச் சந்தையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட, சைவப் புலவர், சைவசித்தாந்த பண்டிதர் அம்பலவாணர் இராஜரட்ணம், ஒரு அரச ஓய்வூதியர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்/சாதனா தமிழ் கலவன் பாடசாலையிலும், யாழ்/ஸ்டான்லி கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். கொழும்பு நகர்க் காவல் (Police) தலைமையகத்திலும், வவுனியா, யாழ்ப்பாணம் நகர்காவல் நிலையங்களிலும் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர். பின்னாளில் யாழ்ப்பாணம் ச.தொ.ச. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் பிரதம லிகிதராகவும், பதில் பிராந்திய முகாமையாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71426).