17111 திருவருட் பயன்: விளக்க உரையுடன்.

சு.சிவபாதசுந்தரம் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, மீள் பதிப்பு ஒக்டோபர் 2001, 7வது பதிப்பு, 1953. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

x, 156 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 22.5×15 சமீ.

மெய்கண்டசாஸ்திர நூல்கள் 14இல் சுருக்கமான ஒன்றாகிய திருவருட்பயன், எளிதில் நினைவுறத் தக்கதான குறட்பாக்களால் ஆனது. திருக்குறளைப் போலவே மிக ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட திருவருட்பயனை உரையின்றிக் கற்பது கடினமாகும். பழைய உரைகள் ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பினும் தற்கால மாணாக்கர்களுக்கேற்ற நவீனமுறையில் இந்நூலின் உரை அமைந்துள்ளது. 1953இல் வெளிவந்த இந்நூலின் ஏழாவது பதிப்பு, தேவைகருதி 2001இல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருண்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருநிலை, அணைந்தோர்தன்மை ஆகிய பத்து அதிகாரங்களில் இந்நூல் வகுத்துத் தரப்பட்டுள்ளது. இதிலுள்ள பதவுரை நிரம்பவழகிய தேசிகரது பொழிப்புரையைத் தழுவியும், விசேஷவுரை சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய சித்தாந்த சாத்திரங்களையும் அவற்றின் பேருரைகளையும் துணையாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்