சிவபுண்ணியம் சிவலிங்கம், இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-6601-14-0.
‘திரு திருமதி சிவலிங்கம் இராஜினிதேவி தம்பதியினர் ஈழத்தில் குறிப்பிடக் கூடியவகையில் அதி உன்னத ஆசிரிய சேவையை வழங்கி மாணவர் மனங்களில் இடம் பிடித்துக்கொண்ட நல்லுள்ளங்கள். இருவருமே இலக்கிய உலகிற்கும் தங்களால் ஆன பங்களிப்பை நல்கி வருபவர்கள். குறிப்பாக, இராஜினிதேவி சிவலிங்கம் தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இருவரும் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். இருவரின் கூட்டு முயற்சியால் அற்புதமான இறைவன் மீதான பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. மிகுந்த சிரத்தையுடன் மிக அழகான மொழியில் இறைவனின் புகழைப் பாடியுள்ளார்கள்.’ (க.பரணீதரன், பின்னட்டைக் குறிப்பு). இந்நூலில் அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் திருப்பள்ளி எழுச்சி, அச்சுவேலி நாவலம்பதி காட்டுமலை கந்தசுவாமி திருப்பள்ளி எழுச்சி, அச்சுவேலி நாவலம்பதி காட்டுமலை கந்தசுவாமி சுப்பிரபாதம், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் சிவ சுப்பிரபாதம் ஆகிய நான்கு பாடல்களும், மேலும் பன்னிரு அருட்பாமாலைகளும் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 386ஆவது நூலாக வெளிவந்துள்ளது.