கரு. பூபாலன். தமிழ்நாடு: கரு. பூபாலன், மேட்டுப்பாளையம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தெரிவுசெய்யப்பட்ட எட்டுப் பேரின் சோகம் கலந்த வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதாய் தாங்கள் எவ்வாறு தமிழ்நாட்டில் புதிய சூழ்நிலையை எதிர்நோக்கித் தமது வாழ்க்கையில் ஏற்றங்களை கண்டனர் என்பதை இந்நூலில் பூபாலன் பதிவுசெய்துள்ளார். மலையகத்திலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களான கே.சங்கரலிங்கம், தமிழகன் என்ற இரமச்சந்திரன், தோழர் எஸ். இசட் ஜெயசிங், குடந்தை பரிபூரணன், ச.முருகேசன், செவ்வந்தி என்ற மணி, கரு.பூபாலன், மா.சந்திரசேகரன் ஆகிய எண்மரும் தாம் அனுபவித்த சொல்லொணாத் துயரத்தினை இந்நூலில் பதிவுசெய்துள்ளனர். கரு.பூபாலன் அரசு வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து, தற்போது பணி நிறைவு பெற்று The Blackboard என்ற அறக்கட்டளையினை தொண்டுநிறுவனமாக நடத்திவருகிறார்.
மேலும் பார்க்க:
ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம். 17993