த.கோகுலரமணன், சே.இ.காதிர் (மலராசிரியர்கள்). கொழும்பு: தமிழ் கர்நாடக இசை மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
(160) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISSN: 2465-6070.
01.08.2004 அன்று கொழும்பில் இடம்பெற்ற ரோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றப் பெருவிழாவில் வெளியிடப்பட்ட ஆண்டு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன், முதலில் தோன்றிய இசை (எஸ்.கே. சிவபாலன்), தமிழர் மத்தியில் சங்கீதம் வரலாற்று ரீதியான ஓர் அறிமுகம் (சி.மௌனகுரு), கர்நாடகச் சங்கீதம் (எம்.எம். தண்டபாணிதேசிகர்), இயலும் இசையும் (எம்.எம். தண்டபாணிதேசிகர்), இசையும் நாடகமும் (எம்.எம். தண்டபாணிதேசிகர்), நாட்டார் இசையின் தனித்துவம் (இளையதம்பி பாலசுந்தரம்), சங்கீத மும்மூர்த்திகள் ஒரு ஒப்பீட்டு ஆய்வு, பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும் தமிழிசையும் (திருமதி சாரதா நம்பிஆரூரன்), தற்கால இசையின் நிறைகளும் குறைகளும் (பி.டி.செல்லத்துரை), Tamil Karnatic Music Society Office Bearers 2004/2005 Senior Committee, இளைஞர்களே நீங்கள் எதை நோக்கி… (ச.கோகுலவர்த்தன்), பண்ணிசை (A.L.M.ஆபித்), இலங்கைத் திருநாட்டில் இசைத்துறையின் போக்கு (சூரியமூர்த்தி சூரியபிரதாப்), இசையின் வழியே பேரின்பம் (றோ.ராகுல் ரகுராம்), இசை (K.M.ரிசாத்), சுவாமி விபுலாநந்தர் (எஸ்.சுகிர்தன்), கல்வி (ஹரிகரன்), எங்கள் தாய்மொழி (மு.அகிலன்), ராகங்கள் (ரமணன்), விதியே உனக்கொரு விதியில்லையா..? (வி. விமலாதித்தன்), மீண்டும் சந்திப்போம் (ஜெ.நிதா), உன்காலடியில்.. (க.பிரதீபன்), வீரநெஞ்சே (ரமணன்), இசை எங்கள் உயிர்மூச்சு (ஸ்ரீ அச்சுதன்), நாடகத்தின் ஒத்திகைகள் (ஜெ.நிரோஜன்), இசைத் தாய் (S.சுகோதயன்), வேத்தியனே…. கவனி (எஸ்.உதயகுமார்), வறுமை முற்றும் அழிவதில்லை (S. Anojit), உண்மை தனையே உணர்வீர்! (கு.யசிந்தன்), சிந்தனைத் துளிகள் (மொஹமட் அஜ்மல்), கவிதை: புதிய பூமி (சுகிர்தன்), அம்மா (மொஹமட் சுஹயில்), மேலைத்தேய இசையும் கீழைத்தேய இசையும் (மேல் பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை – கே. கமலாஷினி), மனித வாழ்வும் இசையும் (மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை – P. தாட்சாயினி), இசையின் மகத்துவம் (கீழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை), மகுடி நாதம் (மேற்பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை- எஸ். கோபிநாத்), இசைக்கொரு நிழல் (மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை -எஸ். கோபிநாத்), நிலவு சிரித்தது (கீழ் பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை- சி. சர்மிளா), தந்தியறுந்த வீணை (கீழ் பிரிவில் முதலிடம் பெற்ற சிறுகதை) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.