ஆசிரியர் குழு. நுகேகொட: கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 106 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 2012-8134.
இவ்வாண்டிதழின் ஆசிரியர் குழுவினரில் பிரதம பதிப்பாசிரியராக தை.தனராஜ், உதவிப் பதிப்பாசிரியராக சசிகலா குகமூர்த்தி, ஆகியோரும் உறுப்பினர்களாக எஸ்.எஸ்.சரூக்தீன், எம்.நவாஸ்தீன், எஸ்.முகுந்தன், செல்வி எம்.சுகிர்தமலர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் வகுப்பறை நடத்தையில் வகுப்பறைப் பருமனின் செல்வாக்கு (P.C.பாக்கீர் ஜவுபர்), இலங்கையில் மூன்றாம் நிலைக் கல்வி: அண்மைக்கால முன்னெடுப்புகள் (தை.தனராஜ்), அறிவுமைய சமூகத்தில் ஆசிரியரின் வகிபங்கு (சசிகலா குகமூர்த்தி), ஆரம்பப் பிரிவு மாணவர்களிடையே அவதானிக்கப்படும் பொதுவான கணித வழுக்கள் (வு.முகுந்தன்), வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் செயன்முறையில் புதியதோர் அணுகுமுறை: 5E மாதிரி (எம்.நவாஸ்தீன்), இலங்கையில் ஆசிரியர் கல்வியில் சமகாலப் பிரச்சினைகள் (ரஜினி மங்களேஸ்வர சர்மா), ஆரம்பக் கட்டிளம்பருவ விருத்திசார் செயல்களும் ஆசிரியரின் பொறுப்புகளும் ( P.W.J. தியாகராஜா), கணித பாடக் கல்வியில் வளங்களும் அடைவு மட்டங்களும் (S.S.சரூக்தீன்) ஆகிய எட்டு கல்வியியல்சார் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.