கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
13.06.2015 அன்று நிகழ்த்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின் போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியின் புலமைக் குழுத் தலைவராக பேராசிரியர் சபா. ஜெயராசா பணியாற்றியிருந்தார். செம்மொழியாகவும் புதுமையின் இயல்புகளைச் சூடிய நவீன மொழியாகவும் நீட்சிகொண்ட தமிழ் மொழி, உலக மொழிகளுள் ஒன்றாக ஏற்றம் பெற்றுள்ளது. அத்தகைய எழுபுலத்தில் தமிழறிவை ஆழ்நிலையிலும் அகல்நிலையிலும் கற்பிப்பதற்குரிய கலைத்திட்ட ஏற்பாடுகளுடன் ‘தமிழ்ப் பட்டயக் கற்கை’ நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தமிழ்மொழிப் பாடத்திட்டங்கள், பண்டிதர் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் ஆகியவற்றைக் கருத்திலே கொண்டு பட்டயக் கல்விக்குரிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள் இடைக்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் என்ற அடுக்குகள் பாடத்திட்டத்திலே சேர்க்கப்பட்டுள்ளன. இலக்கணக் கல்வியும் மொழியியற் கல்வியும் திறனாய்வும் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மரபுவழித் தமிழ்ப் புலமையாளரும் பல்கலைக்கழகத்தினரும் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77874).