சரளினி பெர்ணான்டோ (தொகுப்பாசிரியர்), அன்னலட்சுமி இராஜதுரை (பதிப்பாசிரியர்). கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட்).
127 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0811-16-8.
கல்வி கற்றல் முறைமைகள் பற்றி மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோருக்கும் உதவக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். அறிமுகம், யார் பொறுப்பு, கற்றலின் முக்கியத்துவம், தேவையான கற்றல் திறன்கள், கற்பது எப்படி?, குறிப்புகளை எடுத்தல், பரீட்சைகளில் பதில் எழுதுதல், எப்படி ஆய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள், தன்னார்வப் பணியும் புற பாடவிதானச் செயற்பாடுகளும், வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம், வெற்றியாளராக இருத்தல், பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?, பிள்ளைகளை அதிசிறந்த மாணவர்கள் ஆக்குவது எப்படி?, பெற்றோருக்கு ஒரு விசேட குறிப்பு, முதலுதவி, போதைப்பொருள் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.