17303 சீத்துவக்கேடு: துலைஞ்சுபோன எங்கட வாழ்க்கை.

கந்தையா  பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரிவளவு, 1வது பதிப்பு, 2024. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Commercial Printers, 14, அத்தபத்து ரெரஸ்).

xxii, 382 பக்கம், விலை: ரூபா 3885., அளவு: 26×18 சமீ., ISBN: 978-624-93909-0-4.

தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் ஈழத்தமிழரின் வாழ்வியலிலிருந்து இயல்பாக வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இன்றைய காலச் சூழலில், ‘அந்தக் காலத்து அருமை பெருமைகளை’  சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் பக்கம் பக்கமாகப் பொதித்துவைத்து இந்நூலில் எங்கட ஊரடி, எங்கட தலைவாசலடி, எங்கட அடுப்படி, எங்கட கிணத்தடி, எங்கட மாட்டடி, எங்கட ஆட்டடி, எங்கட கோழிக்கூட்டடி,  எங்கட நாயடி என எட்டு இயல்களாக வகுத்து, ‘அப்புவின்ரை’ ‘ஆச்சியின்ரை’ வாய்மொழிகளாக்கி, காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்களுக்குச் சுவையாகப் பரிமாறியிருக்கிறார். வடபுலத்தின் பிரதேச வழக்கிலேயே முழுப்புத்தகத்தையும் துணிச்சலுடன் எழுதி, அந்த மொழி வழக்குக்கு ஒரு ஆய்வுப் பெறுமதியினையும் வழங்கியுள்ளார். தான் பிறந்து வளர்ந்த ஊரை மையப்படுத்தி எழுதினாலும், இது பொதுவான ஈழத்துத் தமிழ்க் கிராமங்கள் அனைத்துக்கும் பொருந்தி வருவதை இதனை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். மேலும் சீத்துவக்கேடு என்கிற இந்த நூல், ‘துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை’ முறையை மீளவும் நினைவுபடுத்தி வாசகரின் நெஞ்சடைக்கும் பெருமூச்சை சூடாக வெளிக்கொணரத் தவறாது.

ஏனைய பதிவுகள்

16734 இயற்கையும் கடவுளும் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (சென்னை: சிவம்ஸ்). 192 பக்கம், விலை: இந்திய ரூபா