திருமலை சுந்தா (இயற்பெயர்: சின்னத்துரை சுந்தரலிங்கம்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 172, பிரதான வீதி, 1வது பதிப்பு, தை 2007. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).
(2), 48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
குழந்தைப் பருவம், பூப்புனித நீராட்டு விழா, திருமணச் சடங்கு, சைவ அபரக்கிரியை ெகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டள்ளது. சடங்கு, குழந்தைப் பருவம்
நாமகரணம் (குழந்தை பிறந்து 31ம் நாள் பெயரிடல்), திருஷ்டிப் பொட்டு செய்யும் முறை, 41ம் நாள், காதுகுத்தல், சோறூட்டல், முதல் பல் தோன்றுதல், கல்வி ஆரம்பம் (ஏடு தொடக்கல்), பூப்புனித நீராட்டு விழா, நீராட்டல், உணவு முறை, சாமர்த்தியச் சடங்கு, ஆரத்தி எடுக்கும் முறை, திருமணச் சடங்கு, பொன்னுருக்கல், முளைப்பாலிகை போடல், பந்தல் அமைத்தல், மணமகன் அழைப்பு, கடுக்கண் பூணல், தலைப்பாகை வைத்தல், மணமகன் புறப்படுதல், பலகாரத் தட்டம், தேங்காய் தட்டம், கூறைத் தட்டம், பெண் புறப்படுதல், மாப்பிள்ளை அழைப்பு, அரசாணிக்கால், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம் (காப்புக் கட்டல்). மணமகளை அழைத்தல், கன்னிகாதானம், தாலிகட்டுதல், பால், பழம் கொடுத்தல், கோதரிசனம், பாணிக்கரகணம் (கைப்பிடித்தல்), ஏழடி நடத்தல், அம்மி மிதித்தல், கணையாழி எடுத்தல், அருந்ததி பார்த்தல், பொரியிடுதல், ஆசீர்வாதம், அட்சதை, நிறைவு, ஆரத்தி, பூதாக்கலம், அட்சதை, ஆரத்தி, திருமணத்தில் அறுகரிசி இடும் முறை, சைவ அபரக்கிரிகை, மரணச்சடங்கு (சூர்ணோத்சவம்), அஸ்தி சஞ்சயனம், காடாற்று, சாம்பல் அள்ளல், எட்டுக் கிரிகை, அந்தியேட்டி, கல்லெடுப்பு, வீட்டுக் கிரிகை, சபிண்டீகரணம், நவசிராத்தம், ஏகோத்தம் விருத்தி, சம்கிதை (சங்கிதை சிராத்தம்), இடபதானம் (இடபோத்சர்ணம்), ஏகோதிட்டம், மாசிகங்கள், சோதகும்ப சிரார்த்தம் (சொர்க்கபாதேயம்), வைதரணி கோதானம், சபிண்டீகரணம், ஆப்திக சிராத்தம், வருட சிராத்தம், சிராத்தம் செய்யும் இடம், சிராத்தம் செய்யும் காலம், சிராத்த தினத்தில் செய்யத்தக்கவைகள், சிராத்த தினத்தில் செய்யத் தகாதவை, சிராத்தத்திற்குரிய திரவியங்கள், ஆகாத திரவியங்கள், சிராத்தத்துக்கு உபயோகமாகும் பத்திர புட்பங்கள், ஆகாத பத்திர புட்பங்கள், மஹாளயம், தநிஷ்டா பஞ்சமி, துர்மரணம், நாந்தி சிரார்த்தம், தர்ப்பணம், பிண்டம் இடுதல், தசதானம், ஆசௌசம்வரின் செய்யும் விதி, சைவருக்கு உரிய அசௌசம், அபரக்கிரிகை பற்றிய பொது விடயங்கள் ஆகிய அம்சங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் 10ஆவது அம்மா வெளியீடாக வெளிவந்தள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78732).