த.யுவராஜன். மட்டக்களப்பு: அபிராமி வெளியீடு, 515/161, திருக்கோணமலை வீதி, 4வது பதிப்பு, ஒக்டோபர் 2023, 1வது பதிப்பு, ஜுன் 2020, 2வது பதிப்பு, ஜ{ன் 2020, 3வது பதிப்பு, ஜுலை 2020. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்).
52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-93080-0-8.
தமிழ் இலக்கணத்தில் விருப்பமும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு உதவும் நோக்கில், கோவிட் 19 தொற்றுக்காலத்தில் 2020இல் இந்நூல் வெளிவந்து மூன்று பதிப்புகளை குறுகிய காலத்தில் கண்டிருந்தன. இது பல்தேர்வு வினா அமைப்பு நிலையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு வினாவுக்கும் ஐந்து விடைத் தெரிவுகள் தரப்பட்டுள்ளன. முதல் மூன்று பதிப்புகளிலும் 325 வினாக்களுக்கு மட்டுமே விடை கொடுக்கப்பட்டிருந்தது. மீதி 75 வினாக்களுக்கும் விடை கொடுக்கப்படவில்லை. நான்காவது பதிப்பில் 400 வினாக்களுக்கும் விடை கொடுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71700).