17326 உணர்ச்சிகள் (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-02-1.

மகிழ்ச்சி, கவலை, பொறாமை, கோபம், பயம், ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளை ஒவ்வொரு சிறுவரும் தமது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் விளக்குவதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.1 ஆகும்.

ஏனைய பதிவுகள்