எம்.எச்.எம்.யாக்கூத் (தமிழாக்கம்). கொழும்பு: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA), இணை வெளியீடு, மஹரகம: சனத்தொகை மற்றும் குடும்ப வாழ்க்கை (இன விருத்தி சுகாதார) நிறுவனம், கல்விச் செயற்றிட்டம், தேசிய கல்வி நிறுவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
x, 38 பக்கம், விளக்கப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
சமநிலையான உடல், உள மனவெழுச்சிப் பண்புகளுடன் கூடிய சமநிலையான ஆளுமையைக் கொண்ட மாணவரைப் பாடசாலையினூடாக உருவாக்குவதற்காக மாணவரது அறிவு, மனப்பாங்குகள், திறன்களை வளர்க்க உதவத்தக்க புதிய அணுகுமுறைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த வேண்டியது கல்வித்துறையினருக்கு அவசியமாகும். பல்வேறு சீர்கேடுகளுக்குக் காரணமாக அமையும் சந்தர்ப்பங்கள், அவ்வாறானவற்றுக்குப் பிள்ளைகள் ஆளாகக்கூடிய சந்தர்ப்பங்கள் ஆகியன தொடர்பான மாணவஃமாணவியர் முன்வைத்த வினாக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இச்சிற்றேடு இனவிருத்தி சுகாதாரக் கல்விப் பரப்பு தொடர்பான விஞ்ஞானபூர்வமானதும் தெளிவானதுமான திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளப் பெருந்துணையாக அமைகின்றது. இந்நூல் யௌவனப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், பூப்புஃபருவமடைதல், கருத்தரித்தலும் கருச்சிதைவும், அறைகூவல்கள், பொதுவான பிரச்சினைகள், HIV/AIDS ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60874).