அப்துல் றகுமான் அப்துல் ஜமீல். மருதமுனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 124 A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை-1, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
76 பக்கம், விலை: ரூபா 200, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-50248-1-5.
ஜமீல் கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தின் மருதமுனையில் 1969இல் பிறந்தவர். 1993ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான தேசிய விருதினைப் பெற்றவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி ‘தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்’ 2007இல் யாழ். இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும், தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றிருந்தது. இத்தொகுதியில் ஜமீலின் தேர்ந்த கவிதைகளான உம்மா, சித்திரவதைக் காலம், சுயம், நிர்வாணம், பொய் முகம், சாச்சாவின் ஆடுகள், காற்று, கல், குப்பி லாம்பு, புரிதல், பாலம், முன்பள்ளிப் பாடல், குரூரம், எது முதலில், குட்டி நட்டிக் காலம், கொக்குகள், மழைக்குள் மழை, வடிகான், காடு, புதைகுழிகளின் காடு, குளம், ஆதங்கம், இழப்பு, பிரதிபலிப்பு, வேர், இரவு, இரை, அதிகாரம், பிரம்பு, முறிந்த கம்புகள், நிலம், குப்பை வண்டி, சிலந்தி, அடையாளம், பின்னேரத்துக் கடற்கரை, ஆக்கிரமிப்பு, காலம், காகங்கள், வினை, ஒப்புதல், பயணம், ஒறுப்பு, நட்பு பற்றி, தலைப்பிட முடியாத கவிதை, குறி, சலிப்பு, நாட்டுப்புறத்தி, நச்சரிப்பு, புத்தி, தற்கொலை, கழுத்தறுப்பு, மழை குடித்த கனவு, நாய்களின் வருகை, பூர்வீகம், உணர்தல், மாற்றுத் தீர்வு, வலி, தன்னம்பிக்கை பற்றிய பாடல், பன்றி இறைச்சி, தொலைத்தல், தத்தெடுத்தல், வாழ்க்கை, பின்பற்றுதல் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93441).