17528 ஒற்றை வானமும் ஒரு பறவையும்.

ஆதிலட்சுமி சிவகுமார். சுவிட்சர்லாந்து: தமிழர் களறி ஆவணக் காப்பகம், ஐரோப்பா திடல்-1B, 3008 பேர்ண், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

172 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ஐளுடீே: 978-3-033-10135-7.

‘2000ஆம் ஆண்டு என்னுடைய தொடக்ககாலக் கவிதைகள் ’என் கவிதை’ யாக நூல்வடிவம் பெற்றன. அதன் முன்னும் பின்னுமாக மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் (புயலை எதிர்க்கும் பூக்கள்-1990, மனிதர்கள்-2006, பொன்வண்டு-2022) ஒரு நாவலும் (புள்ளிகள் கரைந்த பொழுது-2018) வெளியாகின. இது என்னுடைய ஆறாவது நூல். 2000ஆம் ஆண்டின் பின்னர் நான் எழுதிய கவிதைகள் ஏராளம். 41 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் எழுதியவற்றில் போர் தின்றவை போக, ஆங்காங்கே எஞ்சியிருந்தவற்றை வெகு சிரமங்களின் நடுவே சேகரித்தோம். அவற்றையே தொகுத்து ஒரு நூலாகியிருக்கிறோம்’ (ஆதிலட்சுமி சிவகுமார், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்