17550 சூரியக் குளியல்: கவிதைத் தொகுதி.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, மே 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

ix, (3), 68 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19×13.5 சமீ.

கவிஞர் சூரியநிலாவின் நீண்டகாலக் கவித்துவ ஆவலின் வெளிப்பாடாகவே இந்நூல் அமைந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்பப் பகுதியான சங்ககாலப் பொருள் மரபு போன்றே இவரது சூரியக் குளியலின் பொருள் மரபும் போராலும் காதலாலும் பின்னப்பட்டிருக்கிறது. ஆசிரியரின் முதலாவது நூற்பிரசவம் இது. ‘இப்பொழுது நம் வாசிப்புக்குக் கிடைத்துள்ள இந்தச் சூரியக் குளியல் கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகள் பல யதார்த்த நிலைகளின் முதன்மையான பரிமாணங்களாகக் காணப்படுகின்றன. இங்கு வெப்பமும்-குளிர்ச்சியும், வீரியமும்- மென்மையும்,  கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. ஒவ்வொரு கவிதையினதும் கனதியை இச்சேர்மானங்களே வடிவமைத்துக் கொடுக்கின்றன. ஆகவே கவிஞர் சூரியநிலாவின் சூரியக் குளியல் நிதர்சன வாழ்வின் முழுமைக்கான முனைப்புகள் ஆகிவிடுகின்றன. எனவே இவரது எதிர்கால முயற்சிகளும் முழுமைபெற்று வளர வாழ்த்திவரவேற்போம்’ (முன்னுரையில் – கவிஞர் இ.முருகையன்). 1998இல் கவிதை உலகில் பிரவேசித்த சூரியநிலா, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ் மாவட்டக் கிளையின் எயிட்ஸ் தடுப்பு திட்ட இணைப்பாளராகப் பணிபுரிபவர்.

ஏனைய பதிவுகள்