த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-66-6.
இந்நூலில் தரிசு (சமூக நாடகம்), தந்திர பூமி (சிறுவர் நாடகம்), சதி சுலோசனா (இசை நாடகம்), அருச்சுனன் தபசு (நாட்டுக்கூத்து) ஆகிய நான்கு நாடகப் பிரதிகள் இடம்பெற்றுள்ளன. த.கலாமணி அவர்கள் ஈழத்து நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நடிகரும் அண்ணாவியாருமாகத் திகழ்பவர். தந்தை வழிச் சொத்தாக நாடகக் கலையை பெற்றவர் இவர். த.கலாமணி அவர்களின் தந்தையார் 2000இற்கு மேற்பட்ட மேடைகளில் இசை நாடகங்களை நடித்தவர். த.கலாமணி அவர்களும் 200 இற்கு மேற்பட்ட மேடைகளில் பூதத்தம்பியாக, சத்தியவானாக, கோவலனாக, அர்ச்சுனனாக எனப் பல்வேறு வரலாற்றுப் பாத்திரங்களை ஏற்று பொது மேடைகளிலும், பல்கலைக்கழக மேடைகளிலும் நடித்தவர். (இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 245ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71346).