கி.பவானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
28 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-91-7.
இந்நூலில் பவானந்தனின் இரு நாடகங்களும் இசையும் கதையும் பிரதியும் இடம்பெற்றுள்ளன. அதிகார வர்க்கம் எப்போதும் சாதாரண மனிதனை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டும் அவனது அமைதியான வாழ்வைக் குலைத்துக்கொண்டும் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சேவகம் செய்து தமது தேவைகளை பூர்த்திசெய்யும் அதிகாரிகள் இன்று பெருகிவிட்டார்கள். இந்த நிலையை சாதாரண மனிதர்கள் புரிந்து செயற்படவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் நாடகம் ‘நிறம் மாறும் பூக்கள்’ என்பதாகும். அன்ரன் செக்கோவின் கதையொன்றினைத் தழுவி இந்நாடகம் எழுதப்பட்டது. இரண்டாவது நாடகமான ‘நீர் கொழும்புப் பொம்மை’ என்பது மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு மேடையேற்றப்பட்ட சமூக விழிப்புணர்வு நாடகமாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 369ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72287).