மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டீ.அச்சகம்).
80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-41569-4-4.
அமரர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ ஆற்றலையும் அரசியல் ஆளுமையையும் தற்கால இளைஞர்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் 220 செய்யுள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காவியநூல்; இதுவாகும். அமரர் அஷ்ரப் அவர்களால் வளர்த்துவிடப்பட்ட மூதூர் எம்.எம்.ஏ.அனஸ், திருக்கோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராகவும், அக்கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினராகவும், செயற்குழுச் செயலாளராகவும் பணியாற்றியவர். தனது அரசியல் குருநாதரான அமரர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் உள்வீட்டுப் பிள்ளையாக வளர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக இக்காவியம் அமைந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113544).