ந.பாக்கியநாதன். யாழ்ப்பாணம்: நிதி வெளியீடு, இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).
82 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-3982-03-2.
இச்சிறுகதைத் தொகுதியில், வாழ்வுச் சுடர், அப்பா என்றொரு அகரம், விருதுக் காதல், காணாமல் போன காற்று, காலும் காலனும், தாயென்னும் தெய்வம், அக்கரைக்கு, சிறகொடிந்த பறவை, தொலைந்த நிஜங்கள், சாகாத காற்றின் சப்தங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வடமராட்சியில் இமையாணன் என்றஊரில் பிறந்து வாழும் பாக்கியநாதன் இரண்டு தசாப்தங்களாக எழுதி வருகின்றார். இதுவரை இவரது ‘ஒரு பிடி சாம்பல்’ என்ற கவிதைத் தொகுதியும், ‘சமூக மேம்பாட்டில் கல்வியின் வகிபங்கு’ என்ற கல்வியியல் கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 109812).