எஸ்.ஏ.கப்பார். மருதமுனை 3: வெண்ணிலா பதிப்பகம், 378/2, ஸம்ஸம் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2024. (மருதமுனை: ஜெஸா கிரப்பிக்ஸ், இல.281, பிரதான வீதி).
vi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-95272-1-8.
இத்தொகுப்பில் துரோகம், அப்பாவின் டயரி, தாய் வீடு, சித்தியின் வருகை, நாமொன்று நினைக்க, சமூக சேவகி, தோழி ஜெனீறா, ரியுசன் மாஸ்டர், ஒரு துரோகியின் மனைவி, விதைப்பதும் விளைவதும், அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும், புதிய தலைமுறை, பயணங்கள், பட்டறிவு, வற் வரியும் வெள்ளைத்தம்பி நானாவும் ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர் செயினுலாப்தீன் அப்துல் கப்பார் (எஸ்.ஏ.கப்பார்). 1977முதல் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். வங்கித் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் தொடர்ச்சியாக கவிதை, சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள இவர், ‘தமிழன்’ வார இதழ்களில் வெளிவந்த தனது கதைகளில் தேர்ந்த 15 கதைகளை இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117600).