மூதூர் முகைதீன். மூதூர் 5: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
viii, 83 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-52246-1-1.
கவிதைத் தளத்தில் கால்பதித்து உலவிவந்த மூதூர் முகைதீன் உருவகக் கதைகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இத்தொகுதியை வழங்கியுள்ளார். இந்நூலில் 1974 முதல் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமான சிந்திக்கத்தூண்டும் 15 உருவகக் கதைகள் அடங்கியுள்ளன. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களதும், புதிய தலைமுறை வாசகர்களினதும் வாசிப்புத் தளத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்குடன் இக்கதைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறும் ஆசிரியர், இந்நூலிலுள்ள கதைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு செய்தியை வாசிப்பவர்களின் சிந்தனைக்காக விட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இக்கதைகளில் பெரும்பாலும் அஃறிணைகளே குறியீடுகளாகவும், கதைசொல்லிகளாகவும் இருக்கின்றன. அகம்பாவம், சுதந்திரம், நியதி, மனித குணம், ஏமாற்றம், அபோதம், திருப்தி, இடிம்பு, சுயநலம், தாளாண்மை, ஆற்றல், ஆகுதி, சிரஞ்சீவி, வாதகம், புரிந்துணர்வு ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் நீதியைப் புகட்டும் பழைய நீதிக்கதைகளின் சாயல் படிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107910).
 
				