தியா (இயற்பெயர்: காண்டீபன்; இராசையா) சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080யு, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு).
154 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19541-61-4.
உம்மாண்டி, உஷ், தங்கவாசல், அன்பழகி, அமெரிக்க விருந்தாளி, மை நேம் இஸ் கோகுலன், அண்ணன், அம்மாவின் சேலை, பறவைகள் பறப்பதில்லை, கனவுகளைத் தேடி அலைபவன், இங்கிலீஸ் என்றொரு வேட்டையன், இது விடைபெறும் நேரம், பயங்கரவாதிகள் முகாம், நள்ளிரவுக்கு முந்திய முத்தம் ஆகிய 14 சிறுகதைகளை உள்ளடக்கிய நூல் இது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர் கல்வியை பூர்த்தி செய்தபின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் செயின்ட் தோமஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகளையும் சிறுகதைகளையும் வலைத்தளங்களில் எழுதி வருபவர். ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம் தோற்றமும் தொடர்ச்சியும்’ (2007), ‘எறிகணை-நாவல்’(2021), ‘நீ கொன்ற எதிரி நான்தான் தோழா’ (2023) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவர்.