17629 அரண்: சிறுகதைத் தொகுப்பு

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

100 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-65-9.

இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 246ஆவது நூலாக வெளிவந்துள்ளது. த.கலாமணியின நான்காவது சிறுகதைத் தொகுதி இது. இன்னும் வரக்காணனே, குலக்கொழுந்து, தோழமை, அரண், காரணன், பேராண்மை, வைதேகி, அம்மாவின் பட்டுச்சேலை, அவா, தீதும் நன்றும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. த.கலாமணியின் சிறுகதைகளுக்குள் உட்பொதிந்திருக்கும் உளவியல அம்சங்கள் குறிப்பிடத்தக்கன. குழந்தை உளவியல், முதுமை உளவியல், காதல் உளவியல் என இவரது கதைகளில் உளவியல் அம்சங்கள் மிகுந்து காணப்படுகின்றன. முன்னர் இவர் எழுதியிருந்த ‘பாலித்திட வேண்டுமம்மா’ என்ற தலைப்பிலான கவிதை எட்டாம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்