நிந்தவூர் மக்கீன் ஹாஜி. நிந்தவூர் 18: நிந்தவூர் கலை இலக்கியப் பேரவை, 108, அல்ஹாஜ் மஜீது வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 12: 3ே அச்சகம்).
ix, 114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43629-7-0.
நிந்தவூர் மண் தந்த இலக்கியகர்த்தாக்களில் கலாபூஷணம் மக்கீன் ஹாஜி குறிப்பிடத்தக்கவர். இந்நூலில் வாழ்வியல் மீது கீறல்களை ஏற்படுத்தும் துண்டு துண்டான நிகழ்வுகளைப் புடம்போட்டு சித்திரிப்புகளை சிறுகதைகளாக முன்வைத்திருக்கிறார். அவ்வகையில் இத்தொகுதியில் கௌரவம், கத்தம் பாத்திஹா, அவன் பெத்த பிள்ளைக்கி, நினைவுகள், மாமாவெண்டி, மனிதநேயம், தேர்தல் முடிவு, சுமையா, சொந்தங்கள், லண்டன் மாப்பிள்ளை, உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, ஆசீர்வாதம், கதவு திறந்ததனால், வடு, மனிதர்கள், கைத்தூக்கு, ரோசக்காரி, இது எனக்காக போகும் பயணம், வலிமா விருந்து அழைப்பு, எண்ணங்கள், இனி நான் குடிக்க மாட்டன், நல்லவனுக்கு கோபம் வந்தா, ஒரு தந்தையின் கனவு, நீ ஓடிவந்தவள், புதிய உறவுகள் ஆகிய 25 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 121253).