17633 அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்.

அன்னலட்சுமி இராஜதுரை (புனைபெயர்: யாழ் நங்கை). கொழும்பு 6: இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்,  இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், இல. 9-2/1, நெல்சன் பிளேஸ், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, டீசயளள குழரனெநச ளுவசநநவ).

300 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-98910-3-6.

ஈழத்து இலக்கிய வரலாற்றில் கொள்கைப் பிடிப்புடன் இலக்கியத்துறையில் தனக்கெனவொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் அன்னலட்சுமி இராஜதுரை. கலைச்செல்வியில் ‘யாழ் நங்கை’ என்ற புனைபெயரில் தன் படைப்புகளை உலாவரச் செய்தவர். வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பல வருடங்கள் பணியாற்றியவர். சங்கமம், கலைக்கேசரி ஆகிய பகுதிகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவர் படைத்த 21 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் ‘நெருப்பு வெளிச்சம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த மூட்டம் விலகுமா?, மணியான நேரங்கள், வளரும் தேயும் வெண்ணிலவு, காலம் ஒருநாள் மாறும், ஒரு தேவதை, தூரத்து ஒளி, மண்ணில் வீழ்ந்த சோற்றுப் பருக்கைகள், அவளுக்கென்ன மூன்று ஆம்பிளைப் பிள்ளைகள், புதிய அடிமைகள், நெருப்பு வெளிச்சம், அனுப்பாத கடிதம் ஆகிய 11 கதைகளும், ஆசிரியரின் பிற கதைகளான அன்னை, சொத்துச் சுகம், ஓட்டம், மாய தரிசனம், மாலைப்பொழுது, ஒரு தாயாக இருக்கும் கொடுமை, பசுந்தரையா? பாலைவனமா?, அலையாகி வந்து, தனிமை, அன்புக்கும் எல்லை உண்டா? ஆகிய 10 கதைகளுமாக மொத்தம் 21 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16740 ஒரு தேசிய எழுச்சி (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12ஃ3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2019 (சென்னை: சிவம்ஸ்). 136 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00,