மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). திருக்கோணமலை: இலக்சுமி பிரசுராலயம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
72 பக்கம், விலை: 4 ஸ்டேர்லிங் பவுண், அளவு: 21×15 சமீ.
இது சிறுகதை மஞ்சரியின் 40ஆவது இதழுடன் சிறப்பிதழாக வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு. இதில் சிறுகதை மஞ்சரியின் வாயிலாக இளம் படைப்பாளியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதவன் எழுதி சிறுகதை மஞ்சரியில் வெளிவராத பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது நூலுருவில் வெளிவரும் ஆதவனின் முதலாவது நூலாகும். தான் வாழ்ந்த இலங்கை, கட்டார், சிங்கப்பூர் ஆகிய பிரதேசங்களின் களங்களையே இக்கதைகளின் களமாகக் கையாண்டிருக்கிறார். போரின் வடுக்கள், மாயவாதம், தனிமனித உளச்சிக்கல் என இவரது கதைகளின் பேசுபொருள்கள் விரிந்துள்ளன. இரண்டு மணித்தியாலங்கள் (தமிழ் முரசு, சிங்கப்பூர்-2023), கள்ளியின் கதை (தமிழ் வெளி, 2022), கமுகு (தமிழ் வெளி, 2022), குடைச்சல் (காலைக்கதிர், 2023), ஒரு மாமரத்தின் கதை (தீம்புனல், 2022), பெட்டிக்கடை (தீம்புனல், 2022), பிப்பிலி (தீம்புனல், 2022), சிரிப்பு (தீம்புனல், 2022), தாலாட்டு (கனலி, 2023), வெப்ப வலயம் (தீம்புனல் 2022) ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.