கோகிலா மகேந்திரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2025. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxvi, 98பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6567-04-0.
இத்தொகுதியில் கோகிலா மகேந்திரன் 1980களிலிருந்து இன்று வரை எழுதிய சிறுகதைகளில் தேர்ந்த பன்னிரு கதைகள் இடம்பெற்றுள்ளன. வலிகாமம் வடக்கின் விழிசிட்டி என்ற கிராமத்தில் பிறந்த கோகிலா மகேந்திரன் தான் ஈடுபட்ட கல்வி, நிர்வாக, உளவியல் துறைகள் அனைத்திலும் தீவிர ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் இன்று ஈழத்து இலக்கிய உலகில் முக்கியமானதொரு ஆளுமையாகத் திகழ்ந்து வருகின்றார். இக்கதைத் தொகுதியில் உள்ள கதைகளில் ஆசிரியர், தான் பெற்ற அனுபவங்களின் வழியாக பாத்திரங்களை உருவாக்குவதன் மூலம் அவரும் ஒரு பாத்திரமாகவே வாசகருக்குத் தோற்றமளிக்கிறார். ஒரு நெருடலும் ஓர் அசைவும், ஒருசோகம் இறுகும்போது, பரிகாரம் தேடும் பரிதாபங்கள், கறுப்புக் குரல், அந்த மனமும் இந்த மனமும் உந்த மனமும், வைரஸ் ஒன்றின் வாக்குமூலம், அட்டை பிடித்த(ா)ல், மௌனத்தின் கூப்பாடு, அளவுக்கு மீறிப் பீறும் அறம், வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே, இணைகரத்தின் அயற்கோணங்கள், நீலக்குருவி ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் ‘எங்கட புத்தகங்கள்’ வெளியீட்டகத்தினரின் 15ஆவது பிரசுரமாகும்.