17636 இதுவும் ஒரு கதை.

வேலாயுதம் சிவராஜா (தொகுப்பாசிரியர்). அளவெட்டி: அளவெட்டி மகாஜன சபை வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 2012. (யாழ்ப்பாணம்: முத்து பிரின்டர்ஸ், 122, காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்).

xvi, 161 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

‘வரணியூரான்-ஜூனியர்’ என்ற புனைபெயரில் எழுதிவரும் இளம் எழுத்தாளர் வேலாயுதம் சிவராஜா தொகுத்திருக்கும் 15 சிறுகதைகளும் எட்டு இளம் படைப்பாளிகளால் எழுதப்பட்டவை. விரும்பித் தொலைத்த டயரி (வரணியூரான்-ஜூனியர்), வாழ்வின் நினைவுகளும் நிலைகளும் (இந்திரஜித்), நிலவு சுடும் (வ.வசந்தகுமார்), எப்ப எங்கடை ஊருக்குப் போவம் (பசுபதி உதயகுமார்), உறுதி இலக்கம் 1919 (மாலாதேவி மதிவதனன்), மன்னிக்கவும் (த.தனசீலன்), மனமாற்றம் (ந.ஸ்ரீஸ்கந்தராஜா), வேர்களை நேசிக்கும் விழுதுகள் (பத்மாஷனி மாணிக்கரட்ணம்), எனக்குப் பயமாய்க் கிடக்குது (வரணியூரான்-ஜூனியர்), தவிப்பு (இந்திரஜித்), வீடு என்பது (வ.வசந்தகுமார்), ஒரு கிலோ மா (பசுபதி உதயகுமார்), ஒரு வானில் இரு நிலவுகள் (மாலாதேவி மதிவதனன்), சுகமாக அழவேண்டும் (வரணியூரான்-ஜூனியர்), நானும் கலியாணம் முடிச்சன் (இந்திரஜித்) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 100620).

ஏனைய பதிவுகள்