தர்மு பிரசாத் (பொறுப்பாசிரியர்), ஷோபாசக்தி, கருணாகரன், தர்மினி (பதிப்பாசிரியர்கள்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, இணை வெளியீடு, பாரிஸ்: 51ஆவது இலக்கியச் சந்திப்பு-மார்ச் 2024, 1வது பதிப்பு, மார்ச் 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
396 பக்கம், விலை: இந்திய ரூபா 450.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-95256-30-8.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள்-இளைஞர்கள்-இலக்கிய வாசகர்களால் 1988ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹேர்ண் நகரத்தில் தொடங்கப்பட்ட முதலாவது இலக்கியச் சந்திப்பு, தொடர்ந்த 36 வருடங்களில் 50சந்திப்புத் தொடர்களை மேற்கு ஐரோப்பிய தேசங்களிலும் கனடாவிலும் தாயகத்திலும் நிகழ்த்தி, அதன் 51ஆவது சந்திப்பை பிரான்சின் தலைசநகர் பாரிசில் 2024இல் நிகழ்த்தியது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் பங்களித்துள்ளனர். 10 நாடுகளிலிருந்து எழுதப்பட்ட 25 சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இவை அ.முத்துலிங்கம் (சைபர் தாக்குதல்), அகரன் (தாய்), உமா வரதராஜன் (அந்நிய மரம்), ஓட்டமாவடி அறபாத் (மஹர்), கருணாகரன் (வெண்சுடர்), சப்னாஸ் ஹாசிம் (கன்னி ரத்தம்), சாதனா சகாதேவன் (கரித் தெமலோ), சித்தாந்தன் (சஹரானின் பூனைகள்), செந்தூரன் ஈஸ்வரநாதன் (கோதுமை முகங்கள்), டானியல் ஜெயந்தன் (சிவப்பு நிற உதட்டுச் சாயம்), தமயந்தி (எட்டுக் கிழவர்கள்), தர்மு பிரசாத் (செவ்வரத்தை), தாட்சாயணி (கொலைத் தருணம்), திருக்கோவில் கவியுகன் (கௌரவம்), தேவகாந்தன் (காத்திருப்பின் புதிர் வட்டம்), தொ.பத்திநாதன் (வடக்கத்தியான்), நவமகன் (ஆகிதம்), நஸிகா முகைதீன் (அக்கி மரத்தின் மீது சத்தியமாக), நெற்கொழுதாசன் (இராமன் வில்), நொயல் நடேசன் (இமாலயக் கடன்), பா.அ.ஜயகரன் (தடம்), யதார்த்தன் (தெய்யோ), றஷ்மி (சாயா), ஸர்மிளா ஸெய்யித் (ஃபெர்ன்), ஷோபாசக்தி (மரச் சிற்பம்), ஆகிய படைப்பாளிகளால் எழுதப்பட்டுள்ளன.