17639 உண்மைகள் ஊமையாவதில்லை.

பூநகர் பொன். தில்லைநாதன். பூநகரி: அமரர் சிவநேசராணி வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தயா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

xvi, 78 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44465-0-2.

2005இல் வெளிவந்த ‘நினைவழியா நினைவுகள்’ நூலைத் தொடர்ந்து ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். முல்லைத்தீவு, சுதந்திரபுரத்தில் 29.01.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது துணைவியார் அமரர் சிவநேசராணி தில்லைநாதனின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் பொன். தில்லைநாதன், ஒரு ஆசிரியராக, அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகவென கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்து அம்மக்களுடைய கள நிலைமைகளைப் புரிந்துகொண்டு தனது பரந்த அனுபவத்தின் துணைகொண்டு கலைச்சுவையுடன் இச்சிறுகதைகளை ஆக்கியுள்ளார். உண்மைகள் ஊமையாவதில்லை, வெற்றிக்கிண்ணம் யாருக்கு?, எங்கள் நிலைமை எங்கள் வாழ்க்கை, அவர்கள் வருவார்களா?, நொண்டி சேர், கொம்பிப் பசு, ஒற்றைச் செருப்பு, என்றோ விதைத்தது, காலமெல்லாம் உங்கள் நினைவோடு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட சேவல் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள 10 கதைகளும் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68395).

ஏனைய பதிவுகள்

12439 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1990.

வெ.சபாநாயகம் (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: