வெல்லாவெளி விவேகானந்தம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: தவசிப்பிள்ளை விவேகானந்தம், 1977/78 பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட நண்பர்கள் அணி, இல. 22/1, வன்டிங்ஸ் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2024. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).
xxi, 139 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-93199-0-5.
இத்தொகுப்பில் அக்கினிப் பரீட்சை, பசி, உமிச்சட்டி, நெஞ்சக்கனல், பகிடிவதை, துரோகம், வேலி, கம்பஸ் காதல், பேரிடி, சாட்டை, பள்ளிக் காதல், கனவுகள், பேரிழப்பு, படிப்பினை, மண்ணில் புதைந்த கவிதைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. பாடசாலைக் காலம் முதல் பல்கலைக்கழகக் காலம் வரை இடம்பெற்ற யதார்த்த நிகழ்வுகளுடன் சமூகத்தில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் நிதர்சனமான அனுபவங்களுடன் தனது கற்பனையையும் கலந்து ஹைக்கூ, பழமொழிகள், உவமைகள் எனச் சேர்த்து சுவையாகப் பகிர்ந்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118558).