17770 கொற்றவை பற்றிக் கூறினேன்.

அ.இரவி. லண்டன்: அ.இரவி, ஆகுதி வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 530 பக்கம், விலை: இந்திய ரூபா 500., அளவு: 22×14 சமீ.

அ.இரவி, தனது இளமைக்கால நினைவுகளை இந்நூலில் இலக்கிய நயத்துடன் பதிந்திருக்கிறார். ஒரு சிறுவனின் கண்களால் காட்சிகள் விரிந்த பாங்கு, வாசகரின்  சிறுவயது வாழ்க்கையை திரும்பவும் வாழ்ந்தது போன்ற ஓர் அனுபவத்தை வழங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் வேள்வி என்பது சர்வசாதாரணம். ஆனால் ஆசிரியர் வழங்கும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. தகவல்கள் அனைத்தும் அவரது ஞாபக அடுக்குகளில் இருந்தவைதான். திருவிழாக்கள், வேட்டையாடுதல், உணவுப்பழக்கங்கள், சினிமா, சிவாஜி – எம்ஜியார் சண்டை, பள்ளிக்கூடம், பனம் கள்,  விரதம் இருத்தல்,  பஜனை, சாத்திரம், சாவீடு போன்ற சகல விசயங்களும் சொல்லப்படுகின்றன. வெய்யிலில் அவசரமாக பள்ளிக்கூடத்துக்கு ஓடும்போது உருகிய தாரில் செருப்பு மாட்டுப்பட்டு வார் அறுவதும், செருப்பைக் கிளப்பி எடுத்து  தைக்கக் கொடுப்பதும், திருத்தி அணிந்து பள்ளிக்கு ஓடுவதும் போன்ற நினைவுகள் சினிமாக் காட்சிகள் போல வந்துபோகும்.  சொற்கள் எந்த இடத்திலும் காட்சிகளாக மாறுவதுதான் விந்தை. இதை ஒரு சுயசரிதை நூலாகவும், சமூக வரலாற்று ஆவணமாகவும், ஈழத்துப் போர்க் காட்சிகளாகவும் பார்க்கமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Jogos FBMDS Melhores Jogos por Algum

Content Como funciona barulho bingo online acercade um cassino online? Valores puerilidade algum raciocínio de assolação: Em quais esportes virtuais posso aparelhar na KTO? Versão