17781 நவீன விக்கிரமாதித்தன்.

வ.ந.கிரிதரன். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கொம்பிளெக்ஸ், காந்தி நகர் பிரதான சாலை, வத்தலகுண்டு 624 202, திண்டுக்கல் மாவட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2023. (சென்னை 600 116: ஐயன் ஏ.கே.எல் பிரின்டர்ஸ்).

152 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-94763-08-1.

கனடா- பதிவுகள் இணையத்தில் 23 அத்தியாயங்களில் தொடர் நாவலாக வெளிவந்த படைப்பு. ‘எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ்க்கையினையும் வாழ்வின் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியமே நாவல்’ என்ற கிளாரா ரீவியின் வாசகங்களுடன் நெருக்கம் காணும் நாவல் படைப்பு இது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பல்வேறு பாத்திரங்களைப் பற்றிய உரையாடல்களைக் கொண்டதாக அமைகின்றன. அது வாழ்வின் குறிப்பிடத்தக்க செய்திகளை நினைவுக்கூட்டுக்குள் படிந்து கிடக்கின்ற வாழ்வின் பிரதிகளை மீண்டும் காட்சிப்படுத்துகின்ற பாணியில் தொடர்கின்றது இந்நாவல். காதலினூடாக அல்லது காதலரிடையே வாழ்வின் மிக முக்கிய அங்கதங்களை-செய்திகளைப் பகிர்வதன் மூலம் காதலின் அழுத்தத்தையும் இறுக்கத்தையும் நாவல் அழுத்திச் சொல்கின்றது. நான் விக்கிரமாதித்தன் பேசுகிறேன், மாநகரத்து மாமழையும் மனோரஞ்சிதமும், மனவெளி நண்பர்கள்-சதுரன் & வட்டநிலா தம்பதியினர், மின்னலே நீ மின் பின்னியதொரு பின்னலா?, ஆனை பார்த்த அந்தகர்கள், ஒட்டகங்கள்-40, ஒரு பழைய புத்தகக் கடை அனுபவமும் எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும், காலக்கப்பல் பயணமும் எதிர்காலச் சித்தன் பாடல் கவிதையும், மின்காந்தமணி என்னுமென் சகி, ஏ அதிமானுடரே நீர் எங்கு போயொளிந்தீர், இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று, கூம்புக் காலவெளிக்குள் ஒரு கும்மாளம், நானொரு காலவெளிக்காட்டி வல்லுநன், யாதும் ஊரே யாவரும் கேளிர், கண்ணம்மா எழுதிய கவிதை, நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில, நடுக்காட்டில் வழி தப்பிய நாயகன், தளைகள்! தளைகள்! தளைகள்!, எங்கோ இருக்கும் கிரகவாசிக்கு ஒரு கடிதம், கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை, பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன், ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்), நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகிறேன் ஆகிய தலைப்பிலான 23 அத்தியாயங்களில் இந் நாவல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்