நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம்;, எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (சென்னை 5: மஞ்சு ஓப்செட்).
396 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 17×12.5 சமீ.
தமிழக ஜனரஞ்சக நாவல்களின் பாணியில் எழுதப்பட்ட குடும்ப நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது முதலாவது நாவலாக இது வெளிவந்துள்ளது. ‘நெஞ்சமதில் மஞ்சம் கொள்ள வாராயோ’ என்ற தலைப்புடன் வலைத்தளத்தில் இவர் தொடராக எழுதிவந்த காதல் கதையே இங்கு வேறு தலைப்புடன் நூலுருவாகியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61131).