அ.முத்துலிங்கம் (மூலம்), இரா.துரைப்பாண்டி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 040: எழுத்து பிரசுரம், Zero DegreePublishing, No.55 (7), R-Block, 6th Avenue, அண்ணா நகர், 1வது பதிப்பு, ஜுன் 2023. (சென்னை 600 018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42 கே.பி.தாசன் தெரு, தேனாம்பேட்டை).
213 பக்கம், விலை: இந்திய ரூபா 260., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-90053-59-9.
கனடாவில் வாழும் ஈழத்து எழுத்தாளரும் சிறந்த கதை சொல்லியுமான அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அனுபவக் கட்டுரைகளில் தேர்ந்த சில கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ‘மொழிபெயர்ப்பு’ என்ற முதலாவது பிரிவில் ஒரு புதிய எசமான், ஒரு போலந்து பெண் கவி, அமெரிக்க கவிஞர், செக்கோவின் வேட்டைக்காரன், ரோமன் பேர்மன் மஸாஜ் தத்துவம் ஆகிய கட்டுரைகளும், ‘விமர்சனம்’ என்ற இரண்டாவது பிரிவில் நல்ல புத்தகங்களைத் தேடுவது, பேய்களின் கூத்து, ஒரு பெரிய புத்தகத்தின் சிறிய வரலாறு, கனடா திரைப்பட விழாவில் செவ்வாய்க் கிரகம் ஆகிய நான்கு கட்டுரைகளும், ‘அனுபவக் கதை’ என்ற நான்காவது பிரிவில் அங்கே இப்போ என்ன நேரம், ரோறோ போறா சமையல்காரன், அண்ணனின் புகைப்படம், நான் பாடகன் ஆனது, ஐந்தொகை ஆகிய 5 கட்டுரைகளும், ‘சிந்திப்பதற்கு’ என்ற நான்காவது பிரிவில் நாணாத கோடாரி, தமிழில் மொழிபெயர்ப்பு, பணக்காரர்கள், யன்னல்களைத் திறவுங்கள், பாப்பம், செம்புலப் பெயல் நீர், இலக்கியப் பற்றாக்குறை, அருமையான பாதாளம் ஆகிய எட்டு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71520).