உடப்பூர் வீரசொக்கன். சிலாபம்: இளம் தாரகை வட்டம், உடப்பு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xi, 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-1907-06-8.
அண்மைக்காலங்களில் வெளிவந்த சஞ்சிகைகள், கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் என முப்பத்தி இரண்டு நூல்களின் விமர்சனப் பார்வைகள் இந்நூலில் இ;டம்பெற்றுள்ளன. வீரகேசரி, தினக்குரல், கலைக்கேசரி ஆகிய பத்திரிகைகளில் இவை முன்னர் இடம்பெற்றிருந்தன. டிலோஜின் மோசஸின் அகரம் கவிதை நூல், அன்ரன் செல்வகுமாரின் அந்தரிக்கும் ஆன்மா, கனிவுமதியின் அப்புறமென்ன, மாத்தளை பெ.வடிவேலன், கலைஞர்களின் விபரத் திரட்டு, கண்ணகி கலை இலக்கிய விழா மலர், கதை சொல்லும் உடப்பு, கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய 150ஆவது அகவை மலர், திருக்கோயில் பிரதேச இலக்கிய வரலாறு, மைத்துளிகள் கவிதைத் தொகுப்பு, முன்னைநாதம்- முன்னீஸ்வரம் வடிவாம்பிகை கல்லூரி மலர், பீ.எம்.புன்னியாமீனின் எழுத்தாளர் விபரத் திரட்டு, முருகபூபதியின் ‘நெய்தல்’, நாகபூஷணி கருப்பையாவின் நெற்றிக்கண், அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் அருட்பாமாலை, தம்பி சாஹிப் சித்தி பரீதாவின் இஸ்லாமிய தத்துவ முத்துக்கள், பொன்பரப்பி சஞ்சிகை, புத்தளம் இந்து மகா சபை, புத்தளம் இந்து வித்தியாலயம் தோற்றம், புத்தளம் மாவட்டம் கண்ட சாஹித்திய விழா, வடமேல் மாகாண சபை சாஹித்திய விழா 2017, சிறுவர்களுக்கான சின்னஞ்சிறு கதைகள், புத்தளம் இந்து மகாசபையின் பொன்விழா மலர், ஈழத்திருநாட்டின் திரௌபதி வழிபாடு, துளிர் கவிதை நூல், வ.சிவலோகதாசனின் உடப்பு தமிழ் கலாசாரத்தின் ஊற்று, கதை சொல்லும் உடப்பு, ஊரொன்றின் பெயரறிவோம், பரம்பரை சித்த ஆயுள்வேத வைத்தியம், நிலா தமிழின்தாசனின் வாழ்வு விடியும், முத்துமாதவனின் கிரான் பெரியகோராவெளி கண்ணகி அம்மன் பாமாலை, கண்ணகி கலை இலக்கிய விழா மலர், சிலாபம் சித்தி பரீதாவின் தித்திக்கும் திருமறையின் மகிமைகள், பதுளை சேனாதிராஜாவின் உயிருதிர் காலத்தின் இசை ஆகிய தலைப்புகளில் நூல் விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.