17840 கதைப்பந்தாட்டம்: சுவைஞனின் மதிப்பீட்டுப் படிவம்.

இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

100 பக்கம், விலை: ரூபா 500.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-64-5.

ஜீவநதி சிற்றிதழில் முனைப்புடன் எழுதிவருகின்ற இலக்கிய ஆளுமையான இ.சு.முரளிதரன் அவ்வப்போது  தான் எழுதிவந்த கதைநயக் குறிப்புகளைத் தொகுத்து இந்நூலை வழங்கியிருக்கிறார். இருமைப் பண்பின் குவிவு மையமாக ‘தரிசனம்’, உணர்ச்சிகளின் முடிவிலி நிறமாறுதலாய் ‘சாதாரணங்களும் அசாதாரணங்களும்’, வியர்வையும் கண்ணீரும் கலந்த தேநீர் ‘ஒப்பாரிக் கோச்சி’, ‘கதை முடியுமா?’ சிறுகதைத் தொகுதி பற்றிய சில குறிப்புகள், முடிவிலி மனிதநேயப் பிரதி ‘மக்கத்துச் சால்வை’, எளிமைத் தோரணங்களின் அசைவாய் ‘ஏன்?’ கதைத் தொகுதி, ச.முருகானந்தனின் ‘மீன் குஞ்சுகள்’, போர்க்கால வன்மத்தின் பிரதி விம்பமாக ‘ஒரு மழைக்கால இரவு’, எளிமையின் எழுநயமாய் மலரன்னையின் ‘அப்பாவின் தேட்டம்’, உணர்ச்சிப் போராட்டங்களின் வரைபடமாக ‘கொன்றைப் பூக்கள்’, ஈழத்து வாழ்வியல் முடிச்சுகளோடு ‘தாலி’, கோகிலா மகேந்திரனின் ‘கதைப்பந்தாட்டம்’, இன முரண்பாட்டின் ஆதி ஆவணம் ‘லங்காராணி’, எண்பதுகளின் ஆவணமாக ‘பார்த்தீனியம், அருவிக்கோட்டு வடிவத்தில் அவலங்களின் குவிவு ‘குருதிமலை’, ‘சொடுதா’ துன்பியலின் வாசனை, ‘வரலாறு அவளைத் தோற்றுவிட்டது’ – சில குறிப்புகள்,  கா.சுஜந்தனின் ‘உறவுகள்’ குறுநாவல் சில குறிப்புகள் ஆகிய 18 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வைத்திய கலாநிதி பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 436ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

5 Finest Dogecoin Casinos within the 2024

Articles Greatest Dogecoin Gambling enterprises 2024 DOGE kingdom gambling enterprise extra Gambling Internet sites Bitcoin Gambling enterprise Reviews Considering My personal Sense Dogecoin casino web