17842 குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள்.

குப்பிழான் ஐ.சண்முகன் (மூலம்), புனிதவதி சண்முகலிங்கம் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

64 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-76-4.

தன் கணவனாகிய குப்பிழான் ஐ.சண்முகன் தான் படித்த புத்தகங்களைப் பற்றி அவ்வப்போது குறிப்பேடுகளில் எழுதிவைத்த எண்ணக் கருக்களை ஒரு நூலாகத் தொகுத்து சீராக்கி உருவாக்கி எம் முன் வைத்துள்ளார். கிட்டத்தட்ட இருபதாண்டு கால நீட்சியில் (1990-2010) அவ்வப்போது குப்பிழான் ஐ.சண்முகன் அவர்களால் வாசிக்கப்பட்ட ஏராளமான புத்தகங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இரசனைக் குறிப்புகள் இவை. இதன் வழியாக அரசியல், ஆன்மீகம், இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள் சார்ந்த வாசிப்பு அனுபவம், பொருளாதார அம்சங்கள் எனத் தான் மரணிக்கும் வரை எழுதிய குறிப்புகளையும் அதன் பின்னரான காலங்களில் (2021வரை) இடையிடையே எழுதப்பட்ட குறிப்புக்களையும் இணைத்து இந்நூல் அவரது துணைவியாரால் தொகுக்கப்பட்டு பதிக்கப்பெற்றுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 349ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17335 காகிதக் கப்பல் (2.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.,