க.ந.ஆதவன், ந.துஷ்யந்தன், க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: திருமதி மரகதம் நடேசு, 1வது பதிப்பு, ஜுன் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
128 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
தெணியானின் மறைவின் பின்னர் அவரது பிறந்த தினத்தன்று (06.01.2023) ‘வெளியில் எல்லாம் பேசலாம்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. அதைத் தொடர்ந்து வெளிவரும் இரண்டாவது நூல் இது. தெணியான் பற்றிய கட்டுரைகளும், தெணியானின் படைப்புக்கள் தொடர்பான விமர்சனக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. சாகித்திய ரத்னா தெணியான் (கந்தையா நடேசு, 6.1.1942-22.5.2022) அவர்களின் வாழ்வியல் தடங்கள், தெணியானின் படைப்பாக்க ஆளுமைப் பரிமாணங்கள் (சபா.ஜெயராசா), நான் கண்ட தெணியான் (எஸ்.சிவலிங்கராஜா), தெணியான் வடமராட்சி வாழ்வியலின் படைப்பாக்க ஆளுமை (த.கலாமணி), சாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் தெணியான் (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), தேவரையாளிச் சமூக வரலாற்று எழுத்தியலில் தெணியானின் வகிபாகம் (இ.இராஜேஸ்கண்ணன்), ஈழத்தின் இலக்கிய உலகின் மாமலை தெணியான் அண்ணர் (வல்வை ந.அனந்தராஜ்), சமூகத்தின் இருண்ட பக்கங்கள் மீது ஒளி பாய்ச்சும் கதைகள் தெணியானின் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து (மு.அநாதரட்சகன்), தெணியான் என்னும் ஆளுமையில் நான் பார்த்த ஆளுமைகள் (ஆரணி ஞானசீலன்), அமரர் தெணியான் அவர்களும் மகாசபையும் (க.சின்னராஜன்), முறையான மார்க்சியப் படைப்பாளர் தெணியான் (ந.ரவீந்திரன்), நாவினால் எழுத்தால் நர்த்தனம் புரிந்தோன் (கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்), வாழ்வியல் தரிசனங்களினூடே வடக்கின் ஆத்மாவை படைப்பிலக்கியத்தில் சித்திரித்த தெணியான் (முருகபூபதி), தெணியானின் படைப்புகளில் பெண்கள் (தாட்சாயணி), ‘நான் இன்னும் இறக்கவில்லை’ தெணியான்- தெணியானின் ‘சொத்து’ சிறுகதைகள் பற்றிய உசாவல் (சோ.தேவராஜா), உயர்குடி மேலாதிக்கத்திற்கும் சாதியத்திற்கும் எதிரான தெணியானின் குரல் ‘மரக்கொக்கு’ (எம்.கே.முருகானந்தன்), பனையின் நிழல்-குறுநாவல் ஒரு வாசக நோக்கு (இ.சர்வேஸ்வரா), தெணியானின் ‘பூச்சியம் பூச்சியமல்ல’ (த.ஜெயசீலன்), ‘வெளியில் எல்லாம் பேசலாம்’ வாசகனின் தொகுப்பு குறித்த ஓர் உசாவல் (கே.எம்.செல்வதாஸ்), ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மட்டுமல்ல ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் தெணியானின் படைப்புகள் (கந்தையா சிறீகணேசன்) ஆகிய இருபது ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.