குப்பிழான் ஐ.சண்முகன் (மூலம்), த.அஜந்தகுமார் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு , கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
72 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-91-8.
இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 270ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் குப்பிழான் ஐ.சண்முகன் (1946-2023) எழுதிய 17 கட்டுரைகள் தேடித் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஈழத்தின் மூத்த எழுத்தாளரான இவர் தனது 78 ஆண்டுக்கால வாழ்வில் 57 ஆண்டுகளை ஈழத்து இலக்கிய உலகோடு பிணைத்திருந்தவர். குப்பிழான் ஐ.சண்முகன் தனது வாழ்வியல் அனுபவங்களை 2010ஆம்ஆண்டு வெளிவந்த ‘அம்பலம்’ இதழில் ‘சுயபுராணம்’ என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார். அவ்விதழ் சிறிது காலத்தில் நிறுத்தப்பட்ட சூழலில் சுயபுராணத் தொடரும் தடைப்பட்டுப் போயிற்று. பின்னர் யோ.கர்ணன் அவர்கள் ‘தீபம்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது தூண்டுதலால் ‘ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள்’ என்ற தொடரை 21.08.2016-15.01.2017 காலப் பகுதியில் எழுதினார். மேற்படி சுயபுராணம், ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் ஆகிய இரு பத்திரிகைத் தொடர்களையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. குப்பிழான் ஐ.சண்முகனின் மறைவின் 31ஆவது நாள் நினைவாக 23.05.2023 அன்று வெளயிடப்பட்டுள்ளது.