A.A.D.அமரசேகர, W.M.சுதர்சினி (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 7: மத்திய கொழும்பு கலாசார நிதிய அச்சகம், 11, சுதந்திர அவென்யு).
x, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-613-379-0.
இலங்கையின் கலாசாரம் மற்றும் தொல்பொருளியல் ரீதியான மரபுரிமைகளை எடுத்துக்கூறும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் தொடர் எழுதப்பட்டுள்ளது. அறிமுகம், வரலாற்று முக்கியத்துவம் (மரபுவழிக் கதைகள், அமைவிடங்கள்), வரலாற்றுச் சிறப்புமிக்க சிதைவுகள் (01ஆம் இலக்கத் தொகுதி- போதிமாடம், தூபி), 02ஆம் இலக்கத் தொகுதி (அரண்மனை வளவு), 03ஆம் இலக்க ஆச்சிரமத் தொகுதி, 04ஆம் இலக்க ஆச்சிரமத் தொகுதி (தமிழ்மொழியிலான கல்வெட்டுகளுடன்), 05ஆம் இலக்க ஆச்சிரமத் தொகுதி, 06ஆம் இலக்க ஆச்சிரமத் தொகுதி, அகழ்வுகளும் பேணிப் பாதுகாத்தல்களும், மேற்கொள்ளப்பட்ட சிதைவுகள், பிரிவெனாக் கட்டிடம், ரஜமகா விகாரை வளவிலுள்ள சிதைவுகள், கல்வெட்டுக்கள் அடங்கியுள்ள நுழைவாயில், டெம்பிற்ற விகாரை, புத்தர் சிலைகள் (சுண்ணக் கல்லினாலான புத்தர் சிலையின் பாகங்கள்), பேணிப்பாதுகாக்கப்பட்ட கட்டிடம் (தலதா மாளிகை), கட்டிடச் சிதைவுகள், பேணிப் பாதுகாக்கப்பட்ட சிதைவுகள், 07ஆம் இலக்க ஆச்சிரமத் தொகுதி (மண்ணாலான வளைந்த வடிவ சுற்றுமதில் கொண்டது) சக்கரவாலயம், போதி மாடம், சந்தாகாரவும் படிமாகாரமும், பண்டுவஸ்நுவர பிரதேசத்திலுள்ள ஏனைய முக்கிய இடங்கள் (நிக்கசலா நுவர ரஜமகா விகாரை, விஜயனின் சமாதி, பண்டா வாவி) ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அறிவிற்கான புத்தகம் என்ற தொடரில் 13ஆவது நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71589).