பொன்.இராமதாஸ் (பிரதம பதிப்பாசிரியர்). கொழும்பு: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 106 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ.
மலையக வரலாற்றில் நடேசஐயரின் வகிபாகம் (செல்வி வை.பேபிசாலினி), மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை (செல்வி ஆர்.பவித்ரா), ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மலையக இலக்கியத்தின் பங்கு (செல்வி பி.ஸ்ரீதேவி), மலையக சமூக மேம்பாட்டில் ஆசிரியர்களின் பங்களிப்பு (செல்வி எஸ்.கிருபாஷினி), தோட்டங்களை கிராமங்களாக உருமாற்றுதல் (எஸ்.டேனியல்), மலையக இலக்கியத்தில் முன்னோடி எழுத்தாளர்களின் பங்களிப்பு (செல்வி என்.சாந்தினி) ஆகிய ஆறு பரிசுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் பதிப்பாசிரியர் குழுவில் திரு. எம்.வாமதேவன், பேராசிரியர் தை.தனராஜ், கலாநிதி எஸ்.கருணாகரன், கலாநிதி பீ.சரவணகுமார், திருமதி எம்.சுதர்ஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71424).