17984 கலை நிலம் இதழ் 5: 2024.

பத்மராணி சிவஞானராசா (மலராசிரியர்). உடுவில்: வலிகாமம் தெற்கு பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், திருநெல்வேலி, இருபாலை).

x, 115 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

வலிகாமம் தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களின் முக்கிய இடங்கள், கோவில்கள் மற்றும் சமூகத்திற்கு சகல துறைகளிலும் சேவை செய்த பெரியார்கள் பற்றிய கட்டுரைகள் என்பவற்றை அடக்கியதாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துச் செய்திகள், வரலாறு, ஆளுமைகள், பண்பாடு, சிறுகதைகள், கவிதைகள் என ஆறு பிரிவுகளாக வகுத்து 25 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘வரலாறு’ என்ற பிரிவில் கந்தரோடையும் (ரோமானிய) வாணிப வலைப்பின்னலும் ஃசெ.கிருஷ்ணராசா, மேன்மை மிகு ஏழாலை/இ.கணேசராசா, ஈவினை கற்பக விநாயகர் ஆலய தல வரலாறு/சிவரத்தினம் வினோத், சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன்ஆலய வரலாறுஃநா.சிவசங்கரக் குருக்கள், இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்ஃகு.கோபிராஜ், சங்ககாலம் என்பது எது? அன்று எழுந்த நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்ஃதம்பிப்பிள்ளை சண்முகநாதன் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஆளுமைகள்’ என்ற பிரிவில் நாவலரும் இணுவிலும்ஃமா.ந.பரமேஸ்வரன், சித்தர் வரிசையில் சிவசண்முக வடிவேல்ஃ மு.இந்திராணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்/சுதர்சன் ஜெயலட்சுமி, விடம் இறக்கி உயிர்காத்த உத்தமர் -வைத்தியர் வீரசிங்கம்/இ.இராஜேஸ்வரன் ஆகிய ஆக்கங்களும், ‘பண்பாடு’ என்ற பிரிவில் வலிகாமம் தெற்கு பிரதேசம் சார்ந்த சிற்றிலக்கியப் பதிவுகள்/ சண்முகலிங்கம் சஜீலன், இணுவிலின் பண்பாட்டுச் சிறப்புக்கள்/ சு.தேவமனோகரன், பரத நாட்டியக் கச்சேரியில் வாசிகா அபிநய வெளிப்பாட்டில் பக்கவாத்தியங்களின் பங்களிப்பு’ அ.உமாமகேஸ்வரி, இந்து சமயத்தில் அறம்/ அருளானந்ததேவன் வியாசன், இந்துப் பண்பாட்டுச் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு/ சி.சிவராஜன் ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகளை இராஜினிதேவி சிவலிங்கம் (மோகன ராகம்), மு.இந்திராணி (ஒரு கலைஞனின் ஏக்கம் கலைகிறது), செ.பரமநாதன் (மாறாத மண்வாசனை) ஆகியோர் வழங்கியுள்ளனர். கவிதைகளை குப்பிளான் செல்வகுமார் (நவீன தாலாட்டு), கு.தயாமினி (தொடுவானம் தூரமில்லை), சக்தி தியாகராஜா (தத்துவ முத்துகள்), இரா.ஜெயக்குமார் (எங்கள் வீதிகளும் எம்மவர் மனங்களும்), இயல்வாணன் (இயல்வாணன் கவிதைகள்), இலட்சுமி புத்திரன் (சிறுவர் பாடல்) ஆகியோர் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Casino Bonus Ohne Einzahlung

Articles What type of Search Can i Generate From the An on-line Casino? Bonus As much as step one,100 Most no-deposit incentives in the form