2894 – புனித பயணம்: சிவபாலன் சாந்தரூபன் நினைவு மலர்.

சு.சிவபாலன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சு.சிவபாலன், 40, வைரவ கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

175 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 15 சமீ.

‘Facts can never be denied’, ‘Lie repeated ninety-nine times will become a truth’ ஆகிய இரு பொன்மொழிகளையும் அடிப்படை வாசகங்களாகக் கொண்டு சிவபாலன் சாந்தரூபன் என்ற இளைஞனின் றினைவு மலர் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பத்திரிகைச் சுதந்திரத்தின்’ மறுபக்கம் பற்றி இந்நினைவுமலர் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. 7.12.2001 அன்று வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சாந்தரூபனின் மரணத்தை ஊடகங்கள் திசை மாற்றிச் செய்திகளை வெளி யிட்டதாகவும், தவறானஃஉண்மைக்குப் புறம்பான செய்திகள் வதந்திகளாகப் பரப்பப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. மேற்படி மரண விசாரணை மீதான நீதிபதியின் தீர்ப்பின் வாசகங்கள் இவ்விளைஞனின் மரணத்தின்பாற் பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது. ‘எந்த அரசியலிலும் ஈடுபடாத பாடசாலை மாணவர்கள் இருவர் மரணித்திருக்கிறார்கள். வழங்கப்பட்ட சாட்சியங்களில் இருந்தும், மன்றுக்கு அளிக்கப்பட்ட தடயப் பொருள்களில் இருந்தும் இவ்விரு மரணங்களும் கொலை எனத் தீர்ப்பளிக்கிறேன்’ என்ற நீதிபதி யின் வாசகங்களுடன் இம்மலர்த் தொகுப்பு நிறைவுபெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34746).

ஏனைய பதிவுகள்

Pocket Option – Самая Инновационная Торговая Платформа для Бинарных Опционов

Содержимое Уникальные возможности платформы Инновационные инструменты Поддержка и ресурсы Инновационные инструменты для трейдеров Безопасность и надежность покет опшн Защита данных и финансовая безопасность Доступность и